தெற்கு சூடானைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.
அதன்படி சட்ட விரோதமாக குடியேறிய அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானுக்கு பல அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஏற்கனவே உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சூடானில் இதனால் மேலும் கலவரம் ஏற்படும் அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் தனது நாட்டின் குடிமக்களை ஏற்றுக்கொள்ள தெற்கு சூடான் அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை தெற்கு சூடானைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கிய விசாவை அமெரிக்கா உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்வதாக அறிவித்தது.
எனவே அந்த நாட்டில் இருந்து வரும் குடிமக்கள் அமெரிக்காவின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/