தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.
இந்த பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியமை, பொலிஸ்மா அதிபர் பதவியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டும் 5ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயர் பதவியில் இருக்கின்ற அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான யோசனையாகவே இந்த பிரேரணை இன்று பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது
Link: https://namathulk.com/