எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்சீ தோட்டத்தில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 9 மணியளவில் மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்த சந்தேகநபர், தனது வீட்டிற்கு தீ வைத்து எரித்ததாகவும், தீ, அருகில் இருந்த இரண்டு வீடுகளுக்கும் பரவியதாகவும், அதில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் பொலிசார் கூறினர்.
சம்பவ இடத்திற்கு வந்த பண்டாரவளை மாநகர தீயணைப்பு பிரிவினர் தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்கவின் ஆலோசனைக்கமைலாக, எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப உபேந்திர அபேகுணவர்தன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
Link: https://namathulk.com/
