தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களே காணப்படும் நிலையில் சந்தையில் கோழி இறைச்சி, மற்றும் முட்டையின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகைக் காலத்தில் அதிக கேள்வி எழுவதே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை ஒன்றின் சில்லறை விலை 39 ரூபாய் முதல் 41 ரூபாய் வரை நிலவுகிறது.
ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1100 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Link: https://namathulk.com/
