வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களிற்கு உள்ளான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மடத்தடி, அல்வாய் கிழக்கு அல்வாயைச் சேர்ந்த பிரபாகரன் பிரணவன் எனும் தனியார் நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் இளைஞராவார்.
கடந்த 5ஆம் திகதி இரவு நெல்லியடியிலிருந்து பருத்தித்துறை நோக்கி பிரதான வீதியால் நண்பரை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் மடத்தடி சந்தி பகுதியில் வீதிய விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Link: https://namathulk.com/