ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ஊழல் நிறைந்த அரசு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமைகளில் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029’ இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்த பிறகு, ஊழலைக் கட்டுப்படுத்த அரசு நிறுவனங்களுக்கு அரசாங்கம் மூன்று மாதங்கள் அவகாசம் அளித்ததாகவும், அந்த காலம் தற்போது 06 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஊழலை ஒழிப்பதும், அடுத்த தலைமுறைக்கு அது பரவாமல் தடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/