இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான 7 வார போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில், இஸ்ரேல் காசா மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இன்று காசாவின் ஷிஜையா நகரில் உள்ள 4 மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 23 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் அதிகமாக வாழும் நகர்ப்புற பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
link: https://namathulk.com/