காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – பிரதமர்.

Aarani Editor
1 Min Read
Prime Minister

காணாமல் போனவர்கள் தொடர்பாக அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்தை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.

அத்துடன். இது தொடர்பான பரிசோதனைகளை, சட்ட ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் கையாளப்பட வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த கால நிறுவன ரீதியான தோல்விகளும், அமைப்பு ரீதியான தோல்விகளுமே இந்த விடயங்களில் தாமதத்திற்கு முதன்மையான காரணங்கள் எனவும் பிரதமர் கூறினார்.

இது பிரபலமாக இருப்பது பற்றியது அல்லஇ மாறாக இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நிறுவனங்கள் மற்றும் சூழலை உருவாக்குவது பற்றியும்இ ஏற்கனவே உள்ள அநீதிகளை விசாரித்து நிவர்த்தி செய்வது பற்றியும் ஆகும்.

நிவாரணம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் பெயரளவில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதால்இ பொதுமக்களுக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை. போதுமான வலிமை இல்லாததாலும் தோல்வியடைந்ததாலும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்காக நீதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *