இலங்கையின் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தொடர்ந்து 30,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி வருவதாக சங்கத்தின் செயலாளர் கூறினார்.
ஆனால், இதை நிவர்த்தி செய்ய எந்தத் திட்டமும் இல்லை எனவும் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள தேசிய பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஒழுங்கற்ற மேலதிக வகுப்புகளின் துறை ஊக்குவிக்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளரும், பொருளாதார விரிவுரையாளருமான பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
கல்வி முறைமையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் நேர்மறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.
மேலதிக வகுப்புத் துறையில் ஆண்டு முழுவதும் 200 பில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் புழக்கத்தில் உள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரல விளக்கினார்.
Link: https://namathulk.com/