ஜனாதிபதி செயலகத்தில் நாளை (10) நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார்.
இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிரணிகள் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதத்தில் ஜீவன் தொண்டமானும் கையொப்பமிட்டிருந்தார்.
இக்கோரிக்கையின் பிரகாரமே சர்வ கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் தேயிலை, இறப்பர், இளவங்கப்பட்டை மற்றும் ஆடை உற்பத்தி போன்ற துறைகளில் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும், இதனால் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கும் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com/