இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில் பஞ்சாப் அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் ஆரம்ப வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
பிரப்சிம்ரன் சிங் ஒட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து வந்த வீரர்களும் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 219 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ராசின் ரவீந்திரா 36 ஓட்டங்களும், ருதுராஜ் 1 ஓட்டத்துடனும், துபே 42 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
டோனி 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
இதனைதொடர்ந்து 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.
Link: https://namathulk.com/
