மட்டக்களப்பில் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் அடித்துக் கொலை

Aarani Editor
0 Min Read
கொலை

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, பேரில்லாவெளி – பள்ளத்துச்சேனை பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றிரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் அருகிலிருந்த தண்ணீர் குடமொன்றினால் அடித்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.

சித்தாண்டி- 4 பழைய சந்தை வீதியைச்சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை தாமோதரன் என்பவரே சம்பவத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *