அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஏப்ரல் 1ஆம் திகதி குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
Link: https://namathulk.com/