அதிபர்களை நியமிக்கும்போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கை மற்றும் வழிமுறை பின்பற்றப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நேற்று எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறினார்.
முந்தைய அரசாங்கங்கள் அதிபர்கள் நியமனத்தை சிக்கலாக்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக முறையான நடைமுறைகள் இல்லாமல் பதில் அதிபர்களை நியமிப்பதன் மூலம் பாடசாலை நிர்வாகம் மிகவும் கேள்விக்குரிய நிலையில் உள்ளதாக பிரதமர் கூறினார்.
இந்த செயல்முறை தற்போதைய விதிமுறைகளின்படி, சரியான முறையைப் பயன்படுத்தி சரி செய்யப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஒருவருக்கு அதிபர் பதவி வகிப்பதற்குத் தேவையான தகுதிகளின் அடிப்படையில், அனைத்து தேசியப் பாடசாலைகளுக்கும், வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கும் நேர்காணல்கள் மூலம் அதிபர்கள் நியமிக்கப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபரும் இந்த முறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
link: https://namathulk.com/