உக்ரைன் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்ததற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க – ரஷ்ய கைதிகள் பரிமாற்றத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பெண் கடந்த வருடம் ரஷ்யாவின் யெகடெரின்பர்க் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியினை வசிப்பிடமாகக் கொண்ட சேனியா கரேலினா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை வழங்கியமைக்காக இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/