ராஜகிரியவில் காலாவதியான விசாக்களுடன் 22 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 பேரும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட 22 பேரும் நாடு கடத்தப்படும் வரை வெலிசர மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் இன்று (10) பிற்பகல் ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தை சோதனை செய்த போதே குறித்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
link: https://namathulk.com/