இலங்கை கடற்படை, பொலிசாருடன் இணைந்து, நீர்கொழும்பு பிடிபன பகுதியிலும், கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியிலும் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 82 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் இருநூற்று ஐந்து (205) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு (958) கிராம் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற லொரி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் துன்கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



Link: https://namathulk.com/