அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில், 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் டிரம்பின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ் இலங்கைப் பொருட்களுக்கு 44% பரஸ்பர வரிகளை விதித்தது.
link: https://namathulk.com/