நுவரெலியா, காயத்ரி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 பாண லிங்கங்களுக்கான சிவ ஆலயத்தின் மாபெரும் கும்பாபிஷேகம்.

Aarani Editor
1 Min Read
Nuwara Eliya

நுவரெலியா காயத்ரி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 பாண லிங்கங்களுக்கான சிவ ஆலயத்தின் மாபெரும் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வுகள் அறங்காவலர் சபை நிர்வாகி சக்திவேல் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.

பூஜை நிகழ்வுகள் பிரதிஸ்டா பிரதம குரு குருதாச மணி சிவஸ்ரீ இரா.சண்முக சுந்தர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

அத்துடன், ஆலய பிரதம குரு பரத்வாஜ தத்புருஷ சிவாச்சாரியார் சிவாகம கிரியா ஜோதி யோகராஜ கோமகன் குருக்கள் அவர்களின் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு யாகசாலையில் கணபதி வழிபாட்டுடன் கணபதி ஹோமம் புன்யாவாஜனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சித்தர் முருகேஷ் மகரிஷி விசேட அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றதுடன் காயத்ரி பீடத்தில் உள்ள சிவலிங்க பெருமானுக்கு அலங்கார தீர்த்த அபிஷேக தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து பிரதான யாகசாலையில் கணபதி ஹோமம் புண்ணியாவாஜனம் பூர்ணாகுதி நடைபெற்று விமான கலசங்களுக்கான கும்ப நீர் அபிஷேகம் ஆராதனைகள் பக்தர்கள் புடை சூழ ஓம் நமச்சிவாய கோஷத்துடன் பக்தி மயமாக நடைபெற்றது.

தொடர்ந்து 108 பாணலிங்கங்களுக்கான பிரதான கும்பம் பக்தி பரவசத்துடன் பக்தர்களின் ஓம் நமச்சிவாய அரோகரா கோசங்களுடன் ஆலயத்தின் உள்வீதி வலம் வந்து இவ்வாலயத்தில் பிரதான லிங்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் எம்பெருமான் சிவலிங்கேஸ்வரனுக்கு சுப வேளையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து இவ் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் 108 லிங்கங்களுக்கும் கும்ப நீர் அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனைகள் நடைபெற்றதுடன் தச மங்கள தரிசன நிகழ்வு நடைபெற்று பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *