பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்படும் விசேட சோதனைகளின் போது நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தை மீறி புத்தாண்டு விற்பனையில் ஈடுபட்ட 36 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தை மீறி, நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் செயல்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடைகள், பாதணிகள் மற்றும் மின் சாதனங்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி, மேற்படி சட்ட நடவடிக்கைகளை எடுத்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் சிறுவர்கள் பட்டாசு விபத்துக்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது அதிக அவதானம் செலுத்த வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுஷா தென்னேகும்புர தெரிவித்தார்
link: https://namathulk.com/