இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நேற்றிரவு மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹாலிஎல, கந்தேகெதர வீதி, கொடபிடபத்தனை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் நிலையம் அருகே சென்ற போது, போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த நபர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது இராணுவ பொறியியலாளர் படைப்பிரிவின் பனாகொடையில் முகாமில் பணிபுரிந்து வருவதாகவும் விடுமுறையில் வீடு வந்து பணிக்கு திரும்பாததும் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தொடர்பில் தியத்தலாவ இராணுவ பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
link: https://namathulk.com/