பொலிஸ் சேவையில் 2,500 அதிகாரிகளை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ள உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும், அதன் பிறகு ஆட்சேர்ப்பு செயல்முறை உடனடியாக தொடங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பொலிசாரின் கடமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒரு விசேடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பொலிசார் தொடர்பான நீதிமன்றங்களில் உள்ள 100 வழக்குகள் தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் செல்வாக்கிலிருந்து பொலிசாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
link: https://namathulk.com/