அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று முதல் 125 சதவீதமாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84 சதவீதம் வரி விதித்திருந்தது.
நேற்று (10) சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளை தெளிவுபடுத்திய வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி 145 சதவீதம் என குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இன்று இந்த புதிய வரி விகிதத்தை அறிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹொலிவுட் திரைப்படங்கள் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொலிவுட் திரைப்படங்களின் வெளியீட்டை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
link: https://namathulk.com/