இலங்கை ஏற்றுமதியாளர்கள் தொழில்துறை பலங்களை தூதரகத் தலைவர்களிடம் சமர்பித்துள்ளனர்.

Aarani Editor
1 Min Read
Export Industry

தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், மசாலாப் பொருட்கள், மின்னணு பொருட்கள், கடல் உணவு, ஆடைகள் மற்றும் இரத்தினம் , நகைகள் போன்ற முக்கிய துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏற்றுமதியாளர்களின் குழுக்கள், சர்வதேச சந்தைகளில் இந்தத் துறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையின் தூதரகத் தலைவர்களிடம் தங்கள் தொழில்துறை சுயவிவரங்களையும் பலங்களையும் முன்வைத்தனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, வெளிவிவகார அமைச்சில் அண்மையில் மன்றக் கூட்டம் நடைபெற்றது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் இராஜதந்திர பணிகளுடன் ஏற்றுமதியாளர்களை இணைப்பதில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஏற்றுமதி சபையுடன் இணைந்து, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் ஆதரவுடன் இந்த நிகழ்வை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்தது.

பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா மற்றும் சதுரங்க அபேசிங்கே ஆகியோர் இந்த அமர்வை இணைந்து தலைமை தாங்கினர்.

இலங்கையின் ஏற்றுமதி கூடையை பன்முகப்படுத்தி 2025 ஆம் ஆண்டுக்கான 19 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடைய வேண்டியதன் அவசியத்தை இதன்போது அவர்கள் வலியுறுத்தினர்.

தொழில்துறை பிரதிநிதிகள் தங்கள் துறையின் பலங்களையும், சந்தைப் பங்கை அதிகரிப்பதற்கான சவால்களையும் இதன்போது எடுத்துக்கூரியுள்ளனர்.

சந்தைத் தகவல், வர்த்தக வசதி மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வு உள்ளிட்ட ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கைத் தூதரகங்களின் ஆதரவை ஏற்றுமதி சபை கோரியுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *