மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளில் இலங்கை முப்படையின் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நடமாடும் மருத்துவ சேவைகளை இலங்கையின் விசேட குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
காயங்களுக்கு சிகிச்சை அளித்தல், தொற்றுநோய்களை நிர்வகித்தல் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்தல் உள்ளிட்ட அவசர சுகாதாரத் தேவைகளை நடமாடும் மருத்துவப் பிரிவுகள் நிவர்த்தி செய்து வருகின்றன.
உடனடி மருத்துவ சிகிச்சைக்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயல்பு நிலையை மீட்டெடுக்க உதவும் வகையில் உளவியல் ஆதரவு மற்றும் சுகாதார கல்வியையும் இந்தக் குழு வழங்கி வருகிறது.
Link: https://namathulk.com/