‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான உதவித் தொகை இன்று முதல் பயனாளிகளுக்குக் கிடைக்கும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் அந்தந்தத் தொகைகள் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட, முதியோர் உதவித்தொகை உட்பட அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் விநியோகமும் இந்த மாதம் முதல் வழங்கப்படுவதாகவும் நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.
‘அஸ்வெசும’ நலத்திட்டத்துக்கு தகுதியுள்ள 1,737,141 குடும்பங்களுக்கு மொத்தம் 12.63 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/