கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைககளை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவிற்கு அமைய, குறித்த சபைகளுக்கான தேர்தல்கள் நடவடிக்கைகளை தொடர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து மே 6 ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Link: https://namathulk.com/