அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஹட்சன் ஆற்றில் ஸ்பெயினின் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து நியூயோர்க்; தீயணைப்புத் துறையினர் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/