இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24ஆவது போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
பில் சால்ட், டிம் டேவிட் ஆகியோர் தலா 37 ஓட்டங்களையும் விராட் கோலி 22 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடினர்.
.
இறுதியில், டெல்லி அணி 17.5 ஓவரில் 169 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
Link: https://namathulk.com/