சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1142 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நுரைச்சோலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மதுரங்குளி பகுதியை சேர்ந்த 27 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com/