மியன்மாரில் இன்றையதினம் (11) மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை 8.02 அளவில் 4.1 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக கடந்த மார்ச் 28ஆம் திகதி மியான்மரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.7 மெக்னிடியூட்டாக பதிவான இந்த நிலஅதிர்வு தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/