FAIR MED நிறுவனத்தின் முழுமையான அனுசரணையில் யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை முள்ளியானில் சிறுவர்களுக்கான மகிழ்வகம் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபனால் இன்று(11) திறந்து வைக்கப்பட்டது
வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகர் பிரபாகர மூர்த்தி தலைமையில் இன்று(11) முற்பகல் 10 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.
முள்ளியான் கிராமங்களில் உள்ள சமூகத்தை குறிப்பாக குழந்தைகள் இளைஞர்கள் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்காக மகிழ்வகம் நிறுவப்பட்டது.
இந்த நிகழ்வின் போது முள்ளியான் கிராம அமைப்புகளின் தலைவர்களால் முள்ளியான் பிரதேசங்களில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.




link: https://namathulk.com/