வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் ‘சிவப்பு சித்திரை’ மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று நினைவு கூறப்பட்டது.
உயிர் நீத்தவர்களுக்கான மலர் அஞ்சலியுடன் மௌன வீர அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்னர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் முதன் முதலாக நிகழ்வில் இம்முறை பங்கு கொண்டு பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நிகழ்வில் பங்கு கொள்வது வழக்கமாகும்.
இதன்போது உயிர் நீத்தவர்களின் உறவுகள் தங்களது உறவுகளை நினைத்து ஈகைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
வெருகல் படுகொலையில் 179 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/