கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல்சார் பேரழிவுகள் ஏற்பட்டால் உடனடியாக பதிலளிக்கவும் 24 மணி நேரம் இயங்கக் கூடிய அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுதியுள்ளது.
இதற்காக இலங்கை கடற்படை 106 எனும் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணின் மூலம் பயனர்கள் கடற்படையின் செயல்பாட்டு மையத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், எந்தவொரு அவசரநிலையையும் தெரிவிக்கவும் முடியும்.
இந்த எண்ணை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கம், அவசரகாலத்தில் பதிலளிக்கும் நேரத்தைக் குறைப்பதும், கடல்சார் பேரிடர் சூழ்நிலைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும் ஆகும்.
இலங்கையின் முதன்மையான கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனமாக கடற்படை உள்ளது.
மேலும் இது நாட்டின் கடற்பரப்பின் பாதுகாப்பையும் கடல் சூழலைப் பாதுகாப்பதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடலில் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்தல், எண்ணெய் கசிவு மேலாண்மையில் முதல் பதிலளிப்பவராகச் செயல்படுதல் மற்றும் போதைப்பொருள் மற்றும் மனித கடத்தலை எதிர்த்துப் போராடுதல் ஆகியவை இவற்றில் முக்கியமானவை.
இந்த நிறுவனம் கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதிலும், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உட்படவும் தீவிரமாக பங்களிக்கிறது.
link: https://namathulk.com/