யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 8:50 அளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னால் சென்று கொண்டிருந்த ரிப்பர் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
link: https://namathulk.com/