நாட்டில் மீண்டும் மத மற்றும் இன வன்முறை வெடிக்க அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
அம்பாறை, அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பொதுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் விவசாயம், பால் மற்றும் மீன்பிடித் தொழில்களின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் 2 பில்லியன் ரூபா உறுதிமொழியின் கீழ் திட்டங்கள் அடுத்த மாதம் தொடங்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் சமமாக நடத்தும் ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி மட்டுமே எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன்போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் முதலீடுகள் குறித்தும் ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.
ஜப்பான், இந்தியா மற்றும் சீனா நிதியளிக்கும் திட்டங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
link: https://namathulk.com/
