பாகிஸ்தானில் இன்று மதியம் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் ஒரு மணியளவில் 5.3 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலஅதிர்வினால் மக்கள் அச்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலஅதிர்வின் மையப்பகுதியானது ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாகவும், இந்த நிலஅதிர்வினால் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக், சாக்வால் மற்றும் மியான்வாலி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெஷாவர், மர்தான், மொஹ்மாந்து மற்றும் ஷாப்கதார் ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும். உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/