டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதந்த விமானத்தில், பெண் பயணியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இந்திய பிரஜையொருவர் விமானநிலைய பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விமான பணிக்குழாமிடம் குறித்த பெண் முறைப்பாடளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதன் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Link: https://namathulk.com/
