வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதால் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்னமும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் புகழாரம் சூட்டினார்.
இளவாலை மக்கள் ஒன்றிய அமைப்பின் பிரதான நிதிப் பங்களிப்புடனும், அமரர் மருத்துவர் மோகன் அவர்களது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களினது நிதிப்பங்களிப்புடனும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பல சேவைகளை முன்னெடுத்து வருவதாக ஆளுநர் கூறினார்.
அத்துடன், இன்றைய இளையோருக்கு பொழுதுபோக்குக்கான வசதிகள் உரிய வகையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையினால், சமூகப்பிறழ்வை நோக்கிச் செல்லுவதாக ஆளுநர் தெரிவித்தார்.
ஆனால் இளையோரின் அவ்வாறான போக்கை மாற்றியமைக்க கூடிய ஒன்றாக இந்த உள்ளக விளையாட்டரங்கம் எதிர்காலத்தில் இருக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்ட பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.
link: https://namathulk.com/