நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மன்னார் நானாட்டான் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் கூறினார்.
இதன்போது, ஒரு தனிக் கட்சி அரசாங்கத்தை அமைத்து அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை என பிரதமர் தெரிவித்தார்.
மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாத்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வங்குரோத்து நிலை என்ற முத்திரையை உத்தியோகபூர்வமாக அகற்றுவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், வரவுசெலவுத்திட்டத்தில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்ற விரும்பியதாகவும் பிரதமர் கூறினார்.
ஒன்று பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, அடுத்தது பொருளாதார சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை அதிகரிப்பது என்பனவாகும்.
இதற்காக, அஸ்வெசும அளவை அதிகரித்ததுடன், காலப்பகுதியையும் நீடித்ததாக பிரதமர் சுட்டிக்காட்னார்.
மேலும், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
link: https://namathulk.com/