யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் என்பவராவார்.
புன்னாலைக் கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகாமையில் உள்ள ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், நேற்று அதிகாலை 1.15 மணியளவில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மேற்படி நபர் சென்றுகொண்டிருந்த போது, பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் வண்டியின் பெட்டியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
link: https://namathulk.com/