புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் கடந்த 3 நாட்களில் 134 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்தள்ளது.
ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மட்டும் 387,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் இயக்கப்பட்டதாக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 2.378 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த வருமானம், 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேகநெடுஞ்சாலையில் பயணித்த 297,736 வாகனங்களிலிருந்து ஈட்டப்பட்டது.
link: https://namathulk.com/