2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஒரு நபரும், ஆறு அரசியல் கட்சி ஆதரவாளர்களும் தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில், மொத்தம் ஐந்து முறைப்பாடுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 3 ஆம் திகதி முதல் குற்றச் செயல்கள் தொடர்பான 32 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக 127 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலில் ஈடுபட்ட 15 வேட்பாளர்கள் மற்றும் 52 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இந்த முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மார்ச் 3 திகதி முதல் 12 வாகனங்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
link: https://namathulk.com/