எமது பாரம்பரிய சூரிய நாட்காட்டிக்கு அமைய ‘சித்திரை’ மாதத்தில் பிறக்கும் சிங்கள தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் புத்தாண்டின் விடியல் அமைகின்றது.
நீண்ட வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட இந்தக் கலாசாரப் பண்டிகை ஒரு புறம் எமது தேசிய நல்லிணக்கத்திற்கான கலாசார வெளிப்பாடாகவும் உள்ளது.
எனவே, முழு இலங்கை தேசமாக ஒன்றுபட்டு முன்னெடுக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் பிறக்கவிருக்கும் புத்தாண்டு மகிழச்சி, சௌபாக்கியம் மற்றும் நல்லதிஷ்டங்களைக் கொண்டுவரும் என்பது நம்பிக்கை.
கடந்த சில வருடங்களாக நாடு என்ற ரீதியில் நாம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடி, நிலவிய அரசியல் சமநிலையின்மை போன்ற காரணங்களினால் நாடும், நம் அனைவரினதும் வாழ்வியலும் பாதிப்புக்கு உள்ளாகின.
இதனால் ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் கலாசாரப் பண்டிகையான சிங்கள தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்கள் எம் அனைவருக்கும் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை.
எனினும், 2025ஆம் ஆண்டில் பிறக்கும் இந்த சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னைய சவால்மிக்க காலகட்டத்தைக் கடந்து நாடென்ற ரீதியில் இலங்கையர்களாக மிகவும் சிறப்பான முறையில் வரவேற்க முடிந்துள்ளது.
குறுகிய காலத்தில் நாம் உருவாக்க முடிந்த அரசியல் ஸ்திரத்தன்மை இதற்குப் பெரும் உறுதுணையாக இருந்தது என்பது எனது நம்பிக்கையாகும்.
இதற்கமைய பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் காணப்பட்ட எதிர்பார்ப்பை தோள்களில் சுமந்து சென்றமையாலேயே நாட்டின் நான்கு திசைகளையும் ஒன்றாக இணைத்து அரசியல் கலாசாரத்தை ஏற்றுக்கொண்ட பாராளுமன்றத்தை உருவாக்க முடிந்தது.
கடந்த குறுகிய காலத்திற்குள் மக்கள் எதிர்பார்த்த பொறுப்புக் கூறக்கூடிய வகையில் செயற்படும் சட்டவாக்கத்தை உருவாக்க எம்மால் முடிந்தது என நான் நம்புகின்றேன்.
அதனால் ஏற்பட்ட நற்பயன்களை நாம் தற்பொழுது அனுபவித்து வருகின்றோம்.
பழைய காலங்கடந்த அகற்றவேற்டிய சகல எண்ணங்களையும் அகற்றி, கட்டியெழுப்பிய புதிய நல்ல அரசியல் கலாசாரத்தைப் பயன்படுத்தி, நாம் இலங்கையர் என்ற ரீதியில் புதிய எதிர்பார்ப்பு, அபிலாஷைகளை ஒன்றிணைத்து புதியதொரு யுகத்தில் காலடியெடுத்து வைப்பதுடன், ஒரு சமூகமாகவும் நாடாகவும் புதிய சிந்தனையுள்ள மனிதர்களை உருவாக்க பிறக்கவிருக்கும் புத்தாண்டு நமக்கு வழியைக் காண்பிக்கும்.
நாடாக எமக்கு இருக்கும் இந்தக் கனவை நனவாக்க நாட்டின் சட்டவாக்க நிறுவனம் என்ற ரீதியில் எம்மிடம் வழங்கப்பட்டுள்ள கனமான பொறுப்புக்களின் சுமையை நாம் சரியாக உணர்ந்துகொண்டுள்ளோம் என்பதை நாம் உங்களுக்குப் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே, மக்களின் கனவை நனவாக்குவதற்கு புத்தாண்டில் மேலும் துணிச்சலுடன், நல்லெண்ணம் கொண்டு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என உறுதியளிக்கின்றேன்.
பிறக்கவிருக்கும் சிங்கள தமிழ் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டாக அமைய மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
link: https://namathulk.com/
