சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து பிரதமர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பு.

Aarani Editor
1 Min Read
PM Activities

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட தேசிய விழா பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கடுவலை, பஹல போமிரியவில் உள்ள சட்டத்தரணி சமன் லீலாரத்னவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது காலை 06.44 மணிக்கு இடம்பெறும் வேலை, கொடுக்கல்வாங்கல் மற்றும் உணவு உட்கொள்ளும் சுபவேளையில் ஒரு மா மரத்தை நட்டு பிரதமர் புத்தாண்டு பணிகளை ஆரம்பித்தார்.

சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சடங்குகள், கிராமிய விளையாட்டுகள், கிராமியப் பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவை இங்கு இடம்பெற்றன.

இந்த நிகழ்வை புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, கலாசார விவகாரத் திணைக்களம் மற்றும் கடுவலை பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *