பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி.

Aarani Editor
1 Min Read
PTARepeal

வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவில் உள்ள சிலாவத்துறை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் ஆளாக மாட்டார்கள் எனவும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனநிலையுடன் நெருக்கடிகளைப் பார்க்காது எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *