பிஜி தீவில் நள்ளிரவு 1.32 அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6.5 மெக்னிடியூட் ஆக குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலஅதிர்வு 174 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நேற்றையதினம் மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் நிலஅதிர்வுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/