புத்தாண்டு காலத்தில் குழந்தைகளை விபத்துகளிலிருந்து பாதுகாக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் விபத்துகள் அதிகரிப்பது ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் ஒரு பொதுவான நிகழ்வாகும்.
இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
புத்தாண்டு முடிந்த பின்னர், வாகன விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக, வாணவேடிக்கைகள் காரணமாக குழந்தைகளுக்கு விபத்துகள் ஏற்படுவது அதிகரிப்பதாகவும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தினார்
link: https://namathulk.com/