மட்டக்குளியில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது

Aarani Editor
0 Min Read
Drug Arrest

மட்டக்குளி – கதிரானவத்தை பகுதியில் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து, 52 கிராம் 850 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருளும், 2 கிலோகிராமும் 100 கிராமும் நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு 15ஐ சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *