இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.
206 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கரன் சர்மா போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்த 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/